மீண்டும் படப்பிடிப்பில் பவன் கல்யாண் | வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன் | விஜய் கட்சியில் இணைந்த வாழை பட நடிகர் பொன்வேல் | 12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் |
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளில் சில திரையுலகினர் போட்டியிடுகிறார்கள்.
திமுக சார்பில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி (ஆயிரம் விளக்கு தொகுதி), தயாரிப்பாளர் அம்பேத்குமார் (வந்தவாசி), ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு நடிகர், தயாரிப்பாளர். அவரது கட்சியில் நடிகை ஸ்ரீப்ரியா (மைலாப்பூர்), பாடலாசிரியர் சினேகன் (விருகம்பாக்கம்), தயாரிப்பாளர், பிஆர்ஓ பி.டி.செல்வக்குமார் (கன்னியாகுமரி) கமல்ஹாசன் (கோவை தெற்கு) போட்டியிடுகிறார்கள்.
அதிமுக சார்பில் திரையுலகினர் யாரும் போட்டியிடவில்லை. ஆனால், அவர்களது கூட்டணியில் உள்ள பாஜக சார்பில் நடிகை குஷ்பு (ஆயிரம் விளக்கு) போட்டியிடுகிறார்.
தேமுதிக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் நடிகர் ராஜேந்திரநாத் போட்டியிடுகிறார். விருகம்பாக்கம் தொகுதியில் நடிகர் மயில்சாமி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் நடிகர் விஜய் வசந்த் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.