ஜனநாயக திருவிழா : காலையிலேயே ஓட்டளித்த ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள்
06 ஏப், 2021 - 08:59 IST
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ரஜினி, கமல், அஜித், சூர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் காலையிலேயே தங்களது ஓட்டை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. நம்மை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் கவுரவம், 6.28 கோடி வாக்காளர்களாகிய, ஹீரோக்களுக்கு கிடைத்துள்ளது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். திரைப்பிரபலங்களும் தேர்தல் துவங்கிய உடனே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடிகர் ரஜினி ஓட்டளித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஆழ்வார்பேட்டையில் ஓட்டளித்தார். அவருடன் அவரது மகள்களும், நடிகைகளுமான ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசனும் ஓட்டளித்தனர்.
நடிகர் அஜித் அவரது மனைவி ஷாலியுடன் சென்னை, திருவான்மியூரில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். தேர்தல் துவங்கிய 7 மணிக்கே முதல் திரைப்பிரபலமாக வந்து அஜித் ஓட்டளித்தார்.
நடிகர்கள் சூர்யா, கார்த்தி, இவர்களது தந்தையும் நடிகருமான சிவக்குமார், தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்டோர் சென்னை தி.நகரில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை, குட்செப்ர்ட் பள்ளியில் பொதுமக்கள் உடன் வரிசையில் நின்று ஓட்டளித்தார். உடன் அவரது மனைவியும் வந்திருந்து ஓட்டளித்தார்.
நடிகை குஷ்பு தன் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். இதேப்போன்று நடிகர் ரகுமான் தன் குடும்பத்தினர் உடன் ஓட்டளித்தார். இவர்கள் தவிர இயக்குனர்கள் அமீர், சசிகுமார், மோகன் ஜி உள்ளிட்டோரும் தாங்கள் ஓட்டளித்த போட்டோவை சமூகவலைதளத்தில் செல்பியாக வெளியிட்டுள்ளனர்.
நடிகர் பிரபு அவரது மகனும் நடிகருமான விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தார் சென்னை, தி.நகரில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தனர்.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி ராமசாமி, நடிகைகள் ஸ்மிருதி வெங்கட், நமீதா, சுகன்யா, ரெஜினா, தேவயாணி, இவரது கணவர் ராஜகுமாரன், நடிகர்கள் பிரசன்னா, அருண்விஜய், விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தார், எஸ்.வி.சேகர், விமல், கணேஷ் வெங்கட்ராமன், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலரும் தங்களது ஓட்டுகளை அவர்களின் ஓட்டுச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.
நடந்தே வந்து ஓட்டளித்த விக்ரம்
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார் நடிகர் விக்ரம். தனது வீட்டிற்கு அருகில் தான் ஓட்டுச்சாவடி உள்ளது. இதனால் வாகனங்கள் எதுவும் இன்றி ஓட்டுச்சாவடிக்கு நடந்தே வந்து ஓட்டளித்தார்.
தொடர்ந்து சூரி, யோகி பாபு, கருணாகரன், நாசர் இவரது மனைவி கமீலா, பாடகர் வேல்முருகன், சத்யராஜ், சீனு ராமசாமி, பிரியா பவானி சங்கர், அகத்தியன், மகள்கள் விஜய லட்சுமி, கனி, நடிகை சினேகா, பாபி சிம்ஹா, ரேஷ்மி பாபி சிம்ஹா, சித்தார்த், டி.இமான், மோகன் ராஜா, விஜய் ஆண்டனி, பாத்திமா விஜய் ஆண்டனி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை சிந்து, ஹரிஷ் கல்யாண், ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பலரும் தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.
இயக்குனர் ஷங்கர், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா பாண்டியன், நடிகர்கள் அருள்நிதி, விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், டிடி எனும் திவ்யதர்ஷினி ஆகியோர் ஓட்டளித்தனர். நடிகர் அர்ஜூன் அவரது மனைவி மற்றும் மகள்களுடன் வந்து தனது ஓட்டை பதிவு செய்தார்.
விஷ்ணு விஷால், அருள்நிதி, சிம்பு, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி, ஆர்யா, விஜய் சேதுபதி, சந்தானம், திரிஷா, வரலட்சுமி, ஆண்ட்ரியா, டி.ராஜேந்தர், ரேகா, கவுரவ், ஆர்.கே.சுரேஷ், தேவிஸ்ரீ பிரசாத், சண்முக பாண்டியன், ஜனனி ஐயர், நிக்கி கல்ராணி, ஜாங்கிரி மதுமிதா, பரத், சங்கீதா, கிரிஷ், ஆனந்த்ராஜ், அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சரத்குமார், ராதிகா உள்ளிட்டோர் அவரவர்களின் ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தனர்.