காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
இறுதிசுற்று படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று படத்தில் சூர்யா நடித்திருந்தார். இது குறைந்த கட்டணத்தில் பயணிகள் விமானத்தை இயக்கிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவியது. ஓடிடி தளத்தில் வெளிவந்தாலும் நல்ல வரவேற்பை பெற்ற படம்.
2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியான பட வரிசையில் இடம்பெற்றது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், கதாசிரியர் பிரிவில் இது இருந்தது.
ஆஸ்கர் போட்டிக்கான இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சூரரைப்போற்று படம் இடம்பெறவில்லை. இதன் மூலம் சூரரைப்போற்று ஆஸ்கர் ரேசில் இருந்து வெளியேறி விட்டது.
ஏற்கெனவே மலையாள படமான ஜல்லிக்கட்டு முதல் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இறுதி பட்டியலில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள தி ஒயிட் டைகர் என்ற ஹாலிவுட் படம் இடம் பெற்றுள்ளது.