ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஆஸ்திரேலியாவில் பிறந்த வளர்ந்த ஹரியானா பொண்ணு ஆஷிமா நெர்வால். தெலுங்கு படங்களில் அறிமுகமாகி கொலைகாரன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். தற்போது தமிழில் ராஜபீமாவில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும், தெலுங்கு ஆந்தாலஜி படமான பிட்டகதலுவில் பிங்கி என்ற கதையில் ஆஷிமாவின் நடிப்பு ஆந்திராவில் பரவலாக பேசப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஆஷிமா.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தற்போது கிடைத்து வரும் பாராட்டுக்கள், பலவித காரணங்களால் என் வாழ்வின் சிறப்பு மிக்க தருணமாகியுள்ளது. முதல் காரணம் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரும் ஆளுமைகளான சங்கல்ப் ரெட்டி, நடிகர் சத்யதேவ் காஞ்சர்னா, ஈஷா ரெப்பா, ஸ்ரீனிவாஸ் அவரசலா ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்ததாகும்.
உலகம் முழுக்க 190 நாடுகளில், மிகப்பெரும் பார்வையாளர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள எனது நண்பர்கள், எனது நடிப்பினை கண்டுகளித்தது ஒரே நேரத்தில் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இருந்தார்கள். நிறைய நல்ல கதாபாத்திரங்கள் என்னை தேடி வர ஆரம்பித்துள்ளது. திரை வாழ்வில் எப்போதும் தனித்துவமிக்க கதைகள் மற்றும் சவாலான பாத்திரங்கள் செய்யவே ஆசைப்படுகிறேன். இனிவரும் காலங்களிலும் ரசிகர்கள் பாராட்டும் வகையிலான படங்களை கதாப்பாத்திரங்களை தொடர்ந்து செய்வேன். என்றார்.




