32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
மகாகவி காளிதாஸ் எழுதிய சகுந்தலம் காவியம் தெலுங்கில் சினிமாவாகிறது. இதனை பிரபல தெலுங்கு இயக்குனர் குணசேகரன் இயக்குகிறார். சகுந்தலையாக சமந்தாவும், அவரது காதலன் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடிக்கிறார்கள். நேற்று இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இதில் கலந்து கொண்ட சமந்தா, நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை நிறைய படங்களில் நடித்து விட்டேன். கமர்ஷியல் படம் முதல் த்ரில்லர் படம் வரை நடித்து விட்டேன். அவைகள் எனக்கு எளிதாக இருந்தது. காரணம் அதற்கு பெரிய மெனக்கெடல் தேவையில்லை. ஆனால் சகுந்தலை அப்படி அல்ல. இளவரசியாக நடிக்க போகிறேன் என்கிற பெருமை ஒருபுறம் இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டுமே என்கிற கவலை மறுபுறம் இருக்கிறது. நிறைய நகைகள் அணிந்து பளபள உடைகள் அணிந்து சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் சகுந்தலம் படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. என்றார்.