ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மலையாளத்தில் சில வருடங்களுக்கு முன் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் த்ரிஷ்யம். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.. இதனை தொடர்ந்து, ஏற்கனவே தெலுங்கில் ரீமேக்கான அதன் முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ் மீனாவை வைத்தே, தற்போது த்ரிஷ்யம்-2 படத்தின் படப்பிடிப்பும் துவங்கி நடைபெற்று வருகிறது.. இந்தமுறை தெலுங்கு ரீமேக்கையும் ஜீத்து ஜோசப்பே இயக்குகிறார்.
இந்த இரண்டாம் பாகத்தில் படம் முழுதும் வரும் புதிய ஐஜி கதாபாத்திரத்தில் நடிகர் ராணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்பட்டு வந்தது. அவரும் அவ்வபோது இரண்டு ஹீரோக்கள் கதையில் நடித்து வருகிறார் என்பதால், மறுக்காமல் ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் இந்தப்படத்தில் தான் நடிக்கவில்லை என ஒரு வீடியோ மூலமாக மறுப்பு தெரிவித்துள்ளார் ராணா.




