சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தர்மபிரபு, கூர்க்கா, ஜாம்பி என சில படங்களில் கதையின் நாயகனாக நடித்துள்ள யோகிபாபு நடிப்பில் அடுத்து வெளியாகும் இன்னொரு படம் மண்டேலா. யோகிபாபுவுடன் ஷீலா, சங்கிலி முருகன், ராஜ்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதைப்பார்க்கும்போது தேர்தலை மையப்படுத்திய கதையில் இப்படம் உருவாகியிருப்பது தெரிகிறது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வெளிநாட்டில் இருந்து யோகிபாபுவை வரவைக்கிறார்கள். அதையடுத்து வாக்க ளிக்கும் பூத்தில் ரெண்டு பேர்தான் நிக்கிறதா சொன்னீங்க. மூனாவதா ஒருத்தன் நிக்கான். எனக்கு காசே கொடுக் கலையே என்று நோட்டாவைப்பார்த்து கேட்கிறார். அது நோட்டா என்று மற்றவர்கள் சொல்ல, நோட்டாவோ கோட்டாவோ எதுவாக இருந்தாலும் காசு கொடுத்தால்தான் ஓட்டு என்கிறார் யோகிபாபு. இப்படி காமெடி படம் என்றாலும் அதற்குள் ஒரு கருத்தினை வைத்து மண்டேலா படம் உருவாகியிருப்பது அந்த டீசரில் தெரிகிறது.