காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
கொரோனா தாக்கம் கடந்த மார்ச் மாதம் வந்த பிறகு தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பின் திரைப்படங்களின் புதிய வெளியீட்டுத் தளமாக ஓடிடி தளங்கள் அமைந்தன. தியேட்டர்காரர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த வருடம் சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. அவற்றில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று', ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' ஆகிய படங்களுக்குத்தான் வரவேற்பும், நல்ல விமர்சனங்களும் வெளிவந்தன.
தியேட்டர்களில் வெளியாக வேண்டிய இரண்டே இரண்டு படங்கள்தான் இந்த ஆண்டில் இதுவரையில் ஓடிடி தளங்களில் வெளியானது. மாதவன் நடித்த 'மாறா', ஜெயம் ரவி நடித்த 'பூமி' ஆகிய படங்கள் தியேட்டர் வெளியீட்டிற்காகத் தயாரிக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் ஓடிடி தளங்களில் வெளியானது. இரண்டு படங்களுக்குமே மோசமான வரவேற்பும், விமர்சனங்களுமே கிடைத்தன.
சுமார் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு நாளை மறுநாள் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள 'டெடி' படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படமாவது ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.