பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
சினிமாவில் தான் 'நன்றி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் பலர் நடந்து கொள்வர். வளரும் வரை யாருடைய காலை வேண்டுமானாலும் பிடிப்பார்கள். ஆனால், வளர்ந்த பிறகு ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதையே வேலையாக வைத்திருப்பார்கள்.
அறிமுக இயக்குனர் ராசு ரஞ்சித் பல்வேறு தடைகளுக்குப் பிறகு 'தீதும் நன்றும்' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். நாளை மறுநாள் இப்படம் வெளியாக உள்ளது. படத்தில் அவரும் ஒரு கதாநாயகன், மற்றொரு கதாநாயகனாக ஈசன் நடிக்க, வில்லனாக சந்தீப் ராஜ் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகிகளாக மலையாள நடிகைகளான அபர்ணா பாலமுரளி, லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். 'தீதும் நன்றும்' படத்தில் நடித்த பிறகுதான் அபர்வாணவுக்கு 'சூரரைப் போற்று' பட வாய்ப்பு வந்துள்ளது. லிஜோமோள் ஜோஸும் இந்தப் படத்திற்குப் பிறகுதான் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம்.
'சூரரைப் போற்று' படம் வெளிவந்த பிறகு தன்னை பெரிய நடிகையாக கற்பனை செய்து கொண்டுள்ள அபர்ணா 'தீதும் நன்றும்' படத்தின் பிரமோஷனுக்கு அழைத்த போது வரமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம். சில தினங்களுக்கு முன்பு ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்துள்ளார். அப்படியே ஒரு மணி நேரம் வந்து படத்திற்காக பேட்டி கொடுத்துவிட்டு போங்களேன் என்று கேட்டதற்கு 'நோ' சொல்லிவிட்டாராம். அபர்ணா வரவில்லை என்றால் நானும் வரவில்லை என லிஜோமோள் காரணம் சொல்லி வரவில்லையாம்.
நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நடந்த போது, ஹீரோயின்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்களே, அவர்கள் ஏன் வரவில்லை என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு இயக்குனர் ராசு ரஞ்சித் தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்தார். இந்தப் படத்தில் அவர்கள் சிறப்பாக நடித்ததாகப் பாராட்டிய உங்களுக்கு நன்றி. அவர்கள் பிரமோஷனுக்கு வர மறுத்துவிட்டார்கள். இந்தப் படத்திற்குப் பிறகுதான் அவர்களுக்குப் பெரிய படங்களின் வாய்ப்பு கிடைத்தது. இந்த சிறிய படத்தையும் மதித்து அவர்கள் வந்திருக்கலாம் என்றார்.
தங்களைத் தேடி வந்து முதலில் வாய்ப்பு கொடுத்த இப்படக்குழுவினருக்கு அபர்ணாவும், லிஜோமோளும் செய்யும் கைமாறு இதுதானோ ?.