மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கியபோது, அவரது கணவரான சூர்யா அவர் கதையின் நாயகியாக நடிக்கும் படங்களை தனது 2டி பட நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
அதேபோல் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டுள்ள சாயிஷாவிற்கும் கதையின் நாயகியாக நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ள சாயிஷா, தற்போது டெடி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருப்பவர், தெலுங்கு-, கன்னடத்தில் தயாராகி வரும் யுவரத்னா என்ற படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது சாயிஷாவுக்கும் ஜோதிகா, நயன்தாரா, திரிஷாவைப் போன்று கதையின் நாயகியாக நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால் மனைவிக்காக தானே ஒரு படம் தயாரிக்கும் முடிவில் உள்ளார். இதற்காக சில இளவட்ட டைரக்டர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறார் ஆர்யா.