சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் | 'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் | சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது |
இரண்டு பொம்மைகளை மட்டும் வைத்து கொண்டு, தன்னை கொரோனா நோய் தாக்கிய நிலையிலும், வீட்டுக்குள் தனியாளாக இருந்து ஒரு வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனிடம் உதவியாளராக பணியாற்றியவர். தமிழில் ஜூலை காற்றில் உள்பட பல படங்களுக்கு படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தவுசண்ட் கிஸ்சஸ் என்ற பொம்மை பாடல் உருவான விதம் குறித்து அவர் கூறியதாவது: ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியா கிளம்பிக் கொண்டிருந்தேன், அப்போது தான் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது . அடுத்த சில நாட்களில் எனக்கு கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவ சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்த பிறகு என்னை தனிமைபடுத்தி கொள்ள வேண்டியிருந்தது.
தனிமை கொடியதாக இருந்தது. தனிமையை போக்க ஏதாவது செய்ய நினைத்தேன் அப்போதுதான் எனக்கு இந்த ஐடியா தோன்றியது. முதலில் வெறும் வீடியோவை தான் படம்பிடிக்க ஆரம்பித்தேன். பின்னர் என்னிடமிருந்த இரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து கொண்டு, ஒரு வீடியோவை படம் பிடிக்க துவங்கினேன். மனைவியின் கண்டிப்பால் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. வீட்டுக்குள்ளாகவே பல பின்னணிகளை உருவாக்கி படம் பிடிக்க துவங்கினேன்.
வீட்டில் இருந்த பொருட்களை பயன்படுத்தி பல பின்னணிகளை தனியாளாக உருவாக்க வேண்டியிருந்தது. மொட்டைமாடி, குளியலறை ஷவர் என பல இடங்களில் புதுமையான பின்னணியை உருவாக்கி படம்பிடித்தேன். தீபாவளி நாளில் பட்டாசுகளின் பின்னணியிலும் வீடியோ எடுத்துள்ளேன். இவ்வீடியோவிற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியை அணுகினேன். அடுத்த 24 மணி நேரத்தில் முதல் பிரதியாக ஒரு இசையை தந்தார். பின்னர் ஒரு மாதத்தில் முழுப்பாடலும் உருவாகி விட்டது. என்றார்.