சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் | முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் |
செல்வராகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'.
கொரோனா முடக்கத்திற்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட இந்த நான்கு மாத கால கட்டத்தில் 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே தியேட்டர்களுக்கு மக்கள் அதிகமாக வந்தார்கள். அதற்கு முன்பும், பின்பும் வெளிவந்த படங்களுக்கு மிகக் குறைவான அளவே மக்கள் வந்தார்கள்.
சிம்பு, விஷால், சந்தானம் ஆகியோரது படங்கள் கூட தோல்விப் படங்களின் பட்டியலில்தான் இணைந்தன. இந்நிலையில் நேற்று வெளியான 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு சில ஊர்களில், சில தியேட்டர்களில் நேற்று ஹவுஸ்புல் காட்சிகள் நடந்திருக்கின்றன. இத்தனைக்கும் சிம்பு, விஷால், சந்தானம் ஆகியோரை விடவும் எஸ்ஜே சூர்யா முன்னணி நடிகரல்ல. இருந்தாலும் படத்தின் இயக்குனர் செல்வராகவனை நம்பி நேற்று ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பும் வீணாகப் போகவில்லை.
நான்கைந்து வருடங்களாக முடங்கிப் போய் இருந்த ஒரு படத்திற்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்திருப்பது தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்துள்ளது. நேற்றைய முதல் நாள் வசூல் மட்டும் 2.5 கோடி என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் வசூல் நன்றாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
'நெஞ்சம் மறப்பதில்லை' எவ்வளவு வசூலித்து, லாபம் தரப் போகிறது என்பதைவிட இப்படம் ரசிகர்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்துள்ளதே வெற்றிதான் என்கிறார்கள்.