ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சூப்பர் குட் பிலிம்சின் 90வது படமாக சமீபத்தில் வெளிவந்தது களத்தில் சந்திப்போம். விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய என்.ராஜசேகர் இயக்கி இருந்தார். ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். முழுநீள காமெடி படமாக உருவாகி இருந்த இந்த படம் ஓரளவிற்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்தப் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராஜசேகர் கூறியிருப்பதாவது: களத்தில் சந்திப்போம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. கதையில் தெலுங்கிற்கு ஏற்ற மாதிரி சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. அருள்நிதி கேரக்டரில் சர்வானந்தும், ஜீவா கேரக்டரில் நானியும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையில் தமிழில் ஜீவாவுக்கும், அருள்நிதிக்கும் தனித்தனியாக கதை சொல்லியிருக்கிறேன். அதே நேரத்தில் களத்தில் சந்திப்போம் 2ம் பாகம் உருவாக்கவும் பேச்சு நடந்து வருகிறது. என்றார்.