அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? |
கொரோனா அச்சத்தால் 50 சதவீத இருக்கைகள் அனுமதி இருந்த சமயத்தில் வெளியான ஒரு படம், அடுத்த இரண்டு வாரங்களில் ஓடிடியிலும் வெளியிடப்பட்ட ஒரு படம், அதன் பின்னரும் தியேட்டர்களில் ஓடி 50வது நாளைத் தொடுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். அப்படிப்பட்ட ஒரு சாதனையைச் செய்திருக்கிறது மாஸ்டர்.
ஜனவரி 13ம் தேதி வெளியான மாஸ்டர் 50 சதவீத இருக்கைகளிலேயே முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே நல்ல வசூலைக் கொடுக்க ஆரம்பித்தது. நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறந்தாலும் கூட்டமே வராமல் இருந்த தியேட்டர்களுக்கு கூட்டத்தை அள்ளிக் கொண்டு வந்தது மாஸ்டர் தான். எதிர்பார்த்தது போலவே அனைவருக்கும் லாபம் வந்துவிட்டது என்கிறார்கள்.
250 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாகவும் தகவல். ஜனவரி 29ம் தேதி படம் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியிட்டார்கள். அதற்குப் பின் இப்படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்கு மக்கள் வர மாட்டார்கள் என்றார்கள். அதையும் மீறி ஹவுஸ்புல் காட்சிகள் கூட சில தியேட்டர்களில் ஓடின.
ஓடிடியில் வெளியாகி ஒரு மாதம் கழித்தும் தியேட்டர்களில் ஓடி வரும் மாஸ்டர் படம் இன்று வெற்றிகரமாக 50வது நாளைத் தொட்டுள்ளது. அதனால், விஜய் ரசிகர்கள் நேற்றிலிருந்தே சமூக வலைத்தளங்களில் 50வது நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.
மாஸ்டர் சேர்த்த கூட்டத்தை அடுத்து வேறு எந்தப் படம் சேர்க்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் பல முக்கிய தியேட்டர்களை தற்போது மூடிவிட்டதும் ஒரு அதிர்ச்சித் தகவல்தான்.
மாஸ்டர் இடத்தை கர்ணன், சுல்தான், டாக்டர் யார் நிரப்பப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.