விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா | காந்தாரா 2 படப்பிடிப்பில் படகு விபத்து நடந்ததா? : தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் | “மஞ்சுவாரியரை அறிமுகப்படுத்த அவரது தந்தை என்னிடம் வாய்ப்பு கேட்டார்” : நெகிழ்ந்த ஊர்வசி | ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா |
பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் தோப்புக்கரணம். கோகன் , அக்ஷய், சந்துரு, ரிசிகேஸ்வரன், நிரஞ்சன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர். பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்த தர்ஷிணி இந்த படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். வில்லனாக மிஸ்டர் இண்டியா டைட்டில் வென்ற ஸ்டீவ் நடித்திருக்கிறார். பரணி ஒளிப்பதிவு செய்கிறார், ஷரவன் இசை அமைக்கிறார்.
தயாரித்து இயக்குகிறார், பாஸ்கர் சீனுவாசன். படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரே ஏரியாவில் வசிக்கும் 5 நண்பர்களை அந்த ஏரியாவின் தாதா ஒரு பிரச்சனையில் பொதுமக்கள் மத்தியில் தோப்புக்கரணம் போட வைத்துவிடுகிறார். அதனால் அவமானம் அடைந்த அந்த நண்பர்கள் அந்த தாதாவை பழிவாங்க துடிக்கிறார்கள். இறுதியில் அவர்கள் தாதாவை என்ன செய்தார்கள் தோப்புக்கரணம் போட வைத்தார்களா இல்லை தாதா அவர்களை என்ன செய்தான் என்பதுதான் இந்த படத்தின் கதை. என்கிறார் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன்.