துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
தமிழ் சினிமாவில் உள்ள வாரிசு நடிகர், நடிகைகளில் குறிப்பிட வேண்டிய ஒருவர் ஸ்ருதிஹாசன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அப்பா கமல்ஹாசனுடன் சென்னையில் தங்கியிருந்தவர் அதன்பின் மும்பையில் தனி வீடு எடுத்து தங்கி வருகிறார்.
தெலுங்குப் படங்களில் நடிக்கச் சென்றால் ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தங்குவாராம். தமிழில் அதிகப் படங்களில் நடிப்பதில்லை. அப்படியே இங்கு நடிக்க வந்தாலும் அப்பா கமல்ஹாசன் வீட்டில் தங்காமல் ஹோட்டல்களில் தான் அதிகம் தங்குவார் என்கிறார்கள்.
சமீபத்தில் அப்பா கமல்ஹாசனை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். அப்பாவுடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும், மேலும் சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'டாடி டியரஸ்ட்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'லாபம்' படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.