ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

திரையுலகம் கொரானோ தாக்கத்தில் இருந்து தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்களுக்குக் கூட கூட்டம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மார்ச் மாதத்தில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வந்தால் மக்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்து விடலாம் என்ற ஆர்வத்தில் திரையுலகினர் இருந்தார்கள். ஆனால், ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பு முன்னர் திட்டமிட்ட புதிய படங்களின் வெளியீடுகளை மாற்றும் எனத் தெரிகிறது.
மார்ச் மாதக் கடைசி வாரத்தில் கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருக்கும். அந்த சமயத்தில் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவது சந்தேகம்தான். மேலும், திரைப்பட போஸ்டர்களை ஒட்ட சுவர்கள் கூட கிடைக்காது, அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.
எனவே, மார்ச் 26ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'டாக்டர்', ஏப்ரல் 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'கர்ணன்' ஆகிய படங்களின் வெளியீட்டில் மாற்றங்கள் வரலாம் எனச் சொல்கிறார்கள்.