பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
அஜித், தேவயானி நடித்த 'காதல் கோட்டை', கார்த்திக் நடித்த 'கோகுலத்தில் சீதை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அகத்தியனுக்கு மூன்று மகள்கள். மூத்தவர் கனி, டிவி தொகுப்பாளராக இருந்தவர், தற்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருக்கிறார். இவரது கணவர் இயக்குனர் திரு ஆவார். விஷால் நடித்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன்', கௌதம் கார்த்திக் நடித்த 'மிஸ்டர் சந்திரமௌலி' படங்களின் இயக்குனர். இவர்களது திருமணம் காதல் திருமணம்.
இரண்டாவது மகள் விஜயலட்சுமி, 'சென்னை 28' படத்தில் நடிகையாக அறிமுகமானவர். 'அஞ்சாதே, சரோஜா, பிரியாணி, சென்னை 28 பார்ட் 2' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் 'பண்டிகை' படத்தின் இயக்குனர் பெரோஸ்-ஐ காதலித்து மணந்து கொண்டார்.
மூன்றாவது மகள் நிரஞ்சனி. ஆடை வடிவமைப்பாளரான இவர் கடந்த வருடம் வெளிவந்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை விரைவில் காதல் மணம் புரிய உள்ளார். தனது பேச்சிலர் வாழ்க்கை முடிவதையொட்டி சமீபத்தில் நிரஞ்சனி தனது தோழிகளுடன் 'பேச்சுலர் பார்ட்டி'யைக் கொண்டாடியிருக்கிறார். அந்தப் புகைப்படங்களை விஜயலட்சுமி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
'காதல் கோட்டை' படத்தை இயக்கிய அகத்தியன், தனது மூன்று மகள்களுக்கும் காதல் திருமணம் செய்து வைக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.