ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஐஸ்வர்ய லெட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்பதை இன்று வெளியான டீசருடன் அறிவித்துள்ளார்கள்.
கடந்த சில வாரங்களாகவே இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என செய்திகள் வெளிவந்தன. படத்தின் நாயகன் தனுஷ் கூட, “தியேட்டர் ஓனர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் என்னுடைய அனைத்து ரசிகர்களுக்குமாக 'ஜகமே தந்திரம்' படம் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்,” என்று கூறியிருந்தார்.
ஆனால், தனுஷ் ஆசையை நிராகரிக்கும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் படத்தை நெட்பிளிக்ஸ் தளத்திற்கு விற்றுவிட்டார். அத்தளத்தில் நேரடியாக வெளியாகும் முதல் பெரிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
“ஜகமே தந்திரம்' ஓடிடி தளத்தில் வெளியானால் அடுத்து வெளியாக உள்ள 'கர்ணன்' படத்திற்கு ஏதாவது சிக்கல் வரும் என்பதால்தான் தனுஷ் அப்படி தியேட்டர்காரர்களுக்கு ஆதரேவாக டுவீட் போட்டார் என்றும், 'ஜகமே தந்திரம்' ஓடிடி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே 'கர்ணன்' வெளியீட்டுத் தேதியை அறிவித்தார்கள் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.