லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகிபாபு, ராமராஜன், நடிகையர் சவுகார் ஜானகி, சரோஜாதேவி, பின்னணி பாடகியர் பி.சுசீலா, சுஜாதா, பாடகர் சிக்கில் குரு சரண், கடம் வித்வான் திருப்பனந்தாள் மாரிமுத்து, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, தயாரிப்பாளர் தாணு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உட்பட, 130 பேர், தமிழக அரசின் கலைமாமணி விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இன்று(பிப்., 20) மாலை இவர்களுக்கான விருதை கோட்டையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினர்.
கலைமாமணி விருது பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன் : மகிழ்ச்சியான தருணம். இங்கு நிற்க காரணமான தமிழக மக்களுக்கும், இந்த விருதை கொடுத்த அரசுக்கும், முக்கியமாக எனது பெற்றோருக்கும் நன்றி சொல்கிறேன். விருது ஊக்கம் தருகிறது. இன்னும் நிறைய நல்ல படங்களை தரணும் என்கிற எண்ணம் எழுந்துள்ளது. முதல்முறையாக கோட்டைக்கு வந்துள்ளேன். சாதாரண குடிமகனாக இருக்கும் எல்லோருக்கும் இங்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். மக்கள் பிரதிநிதியாக வரணும் என்கிற ஆசையில்லை.
சினிமாவில் கதாநாயகன் ஆவேன் என்று ஆசைப்பட்டது இல்லை. சினிமாவில் இருக்க ஆசைப்பட்டேன். இன்று விருது வாங்கும் அளவுக்கு வந்துள்ளேன். இந்த விருதுக்கு இன்னும் என்னை தகுதிப்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறேன். அதைத்தாண்டி வேறு ஒன்றும் யோசிக்கவில்லை. என்னாலும் சாதிக்க முடியும் என்றால் எல்லோராலும் சாதிக்க முடியும். சமூகபிரச்னைகள் நிறைய இருக்கும் அது படங்கள் வாயிலாகவும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் ஏதோ எனக்கு தெரிந்த விஷயங்களுக்கு குரல் கொடுக்கிறேன் என்றார். விவசாயம் தொடர்பான பிரச்னை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, பதில் கூற மறுத்து அங்கிருந்து சென்றுவிட்டார்.
தாணு, யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மதுமிதா, சங்கீதா, ஜாக்குவார் தங்கம், ஐசரி கணேஷ், டி.இமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்று விருதுகளை பெற்று சென்றனர்.