இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
கைவசம் ரிலீசுக்கு தயாராக படங்களை முடித்து தயாராக வைத்திருக்கும் விஷ்ணு விஷால் அடுத்ததாக மோகன்தாஸ் என்கிற படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தை முரளி கார்த்திக் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்திற்கான நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தில் மலையாள நடிகரான இந்திரஜித் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் இந்திரஜித்தும் அவரது சகோதரரான பிரித்விராஜும் தனித்தனி ஹீரோக்களாக தங்களுக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்துள்ளார்கள். பிரித்விராஜை போல தானும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் இந்திரஜித். ஆனால் அவர் நடித்த நரகாசூரன் ரிலீஸ் ஆகமுடியாத சிக்கலில் இருக்கிறது. குயீன் வெப் சீரிஸில் எம்.ஜி.ஆராக நடித்திருந்தார். அதுவும் ரசிகர்களிடம் கவனம் பெறாமலேயே போனது. இந்தமுறை விஷ்ணு விஷாலின் படம் இவருக்கு தமிழில் நல்ல துவக்கத்தை கொடுக்கும் என நம்பலாம்.