இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த பத்து வருட காலமாகவே, குறிப்பாக மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் தான் நடிக்கும் படங்களில் தன்னுடைய கதாபாத்திரங்களில் ஒரே விதமான தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். குறிப்பாக சால்ட் பெப்பர் லுக்குடன் தலைமுடி, தாடி என ஒரே வெள்ளை மயமாகத்தான் காட்சி தருவார். பொது வெளியிலும் கூட அப்படித்தான்.
இந்தநிலையில் மொட்டையடித்து ஓரிரு நாட்களே ஆனது போன்று வழுவழு தலையுடனும் தாடியே இல்லாமலும் புதிய தோற்றத்தில் வலம் வருகிறார் அஜித். சில தினங்களுக்கு ரைபிள் கிளப்பிற்கு செல்ல அஜித் இடம் மாறி வந்த போது அவரின் இந்த தோற்றம் தெரியவந்தது. இந்த தோற்றத்தில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஒருவேளை வலிமை படத்திலும் இதுபோன்ற ஒரு கெட்டப்பில் அஜித் நடிக்கிறாரோ என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பேசிக்கொள்கிறார்கள்.