ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் மற்றும் பலர் நடிக்கம் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தை நான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கும் போதே டீசர் எல்லாம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் கௌதம் மேனன். அந்த முதல் டீசரே 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் கூட இப்படத்தின் பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டு படம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்று காட்டிக் கொண்டார்கள். நான்கு வருடங்களாக உருவாகி வரும் படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்களும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்போது படத்திற்கு ஒரு விடிவுகாலம் வந்திருக்கிறதாம். விரைவில் படத்தை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் நடிக்க வேண்டிய சில காட்சிகள் இன்னும் படமாக வேண்டியிருக்கிறதாம். அவற்றை முடித்து இந்த வருடத்தில் படத்தை எப்படியும் வெளியிட்டுவிடுவார்களாம்.