கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றியை ருசித்தவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அதனாலேயே தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து, அவர் இயக்கிவரும் ஆர்ஆர்ஆர்' படத்திற்கு தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப்படம் வரும் அக்-13ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் இதன் மற்ற மொழி வெளியீட்டு உரிமைகளுக்கான வியாபாரம் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தமிழில் இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் சுமார் 42 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் பப்ளிசிட்டி மற்றும் இதர செலவுகளை கணக்கிட்டால் சுமார் 50 கோடியை இந்தப்படத்திற்காக இறக்குகிறதாம் லைகா நிறுவனம், அதேசமயம், இந்த சூழலில், படத்தின் வசூலில் தனது 50 கோடி அசலுடன் லாபத்தையும் பார்க்கவேண்டிய ரிஸ்க் லைகாவுக்கு இருக்கிறது என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.