பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? |

ஜெயம் கொண்டான் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ஆர்.கண்ணன் தொடர்ந்து, வந்தான் வென்றான், சேட்டை, கண்டேன் காதலை , இவன் தந்திரன், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, பிஸ்கோத் படங்களை இயக்கினார்.
தற்போது தள்ளி போகாதே என்ற படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அமிதாஷ், ஆடுகளம் நரேன், வித்யூலேகா ராமன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.
"கொரோனா கால இடையூறுகள் இருந்தாலும் படத்தை திட்டமிட்டபடி முடித்து விட்டோம். எனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இந்த படம் இருக்கும். ரொமாண்டிக் காதல் படமாக இருந்தாலும் பேமிலி செண்டிமெண்ட் கலந்த உணர்வுபூர்வமான படமாக இருக்கும். விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்க இருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.