''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தற்போது நடிகர் அதர்வா தள்ளிப்போகாதே, அட்ரஸ், நவரச, பட்டத்து அரசன் என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏற்கனவே சற்குணம் இயக்கத்தில் சண்டி வீரன் என்ற படத்தில் நடித்த அதர்வா தற்போது இரண்டாவது முறையாக பட்டத்து அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார் உட்பட்ட பல பிரபலங்களும் நடிக்கிறார்கள்.
பெண்கள் கபடியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள எம்ஜிஎம் கடற்கரை ஓரம் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் நடைபெற்று வந்தது. ஆனால் நேற்று நள்ளிரவு சென்னையில் பலத்த மழை பெய்ததின் காரணமாக செட்டுக்குள் கடல் நீர் புகுந்து விட்டது. இதனால் தொடர்ந்து நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது படத்திற்கு தற்காலிகமாக பட்டத்து அரசன் என்று பெயர் வைத்திருந்த போதும் இது மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.