மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பாகுபலி' படத்திற்குப் பிறகு தென்னிந்தியத் திரைப்படங்கள் தங்களது எல்லைகளைக் கடந்து வட இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. அதன்பிறகு தற்போது எடுக்கப்பட்டு வரும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் தென்னிந்திய வெளியீடாக மட்டுமல்லாமல் வட இந்திய வெளியீடாகவும் அமைந்து 'பான் இந்தியா' படங்களாக மாறியுள்ளது.
அந்த விதத்தில் வரிசையாக சில பான் இந்தியா படங்கள் வெளிவர உள்ளன. அவற்றில் பெரும்பாலான படங்கள் தெலுங்குப் படங்களாக மட்டுமே இருக்கின்றன. ஒரு காலத்தில் தென்னிந்தியத் திரையுலகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் தான் சாதனை புரிந்த படங்களாக இருந்தன. அந்த இடத்தை தற்போது தெலுங்குப் படங்கள் கைப்பற்றிவிட்டது.
ஜுலை 2ல் 'மேஜர்', ஜுலை 16ல் 'கேஜிஎப் 2', ஜுலை 30ல் 'ராதே ஷ்யாம்', ஆகஸ்ட் 13ல் 'புஷ்பா', செப்டம்பர் 9ல் 'லைகர்', அக்டோபர் 13ல் 'ஆர்ஆர்ஆர்' என இந்தப் படங்கள் அனைத்துமே பான் இந்தியா படங்களாகத்தான் வெளியாக உள்ளன. அவற்றில் ஒரு படம் கூட தமிழ்ப் படம் இல்லை என்பது தமிழ்த் திரையுலகத்திற்கு வருத்தமான ஒரு விஷயம்.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் பான் இந்தியா படமாகத்தான் வெளிவந்தது. ஆனால், ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியான இப்படம் வட இந்தியாவில் படுதோல்வியைச் சந்தித்தது. தெலுங்குத் திரையுலகத்துடன் போட்டி போடும் அளவில் தமிழ் சினிமா இனி வரும் காலங்களில் போட்டி போட்டால் தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.