தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
பாகுபலி படத்தின் ரிலீசுக்கு பிறகு பிரபாஸ்-அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் ஒருகட்டத்தில் நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று பிரபாஸ்-அனுஷ்கா ஆகிய இருவருமே தெரிவித்து அந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அதையடுத்து தனது உறவுக்கார பெண் ஒருவரை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகி, அந்த செய்தியும் பின்னர் அடங்கிப் போனது. இந்தநிலையில் தற்போது ஒரு தொழிலதிபரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக டோலிவுட்டில் ஒரு ஹாட் நியூஸ் வெளியாகியிருக்கிறது. இந்த செய்தியாவது உண்மையா? இல்லை இதுவும் வழக்கம்போல வதந்திதானா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தற்போது பிரபாஸ் ராதே ஷ்யாம், சலார், ஆதி புரூஷ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.