சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு |

ஒரு படத்திற்குத்தான் முதல் வருடக் கொண்டாட்டம் முதல் அடுத்தடுத்த வருடக் கொண்டாட்டம் என ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால், ஒரு செல்பி புகைப்படத்திற்குக் கூட முதல் வருடக் கொண்டாட்டம் என்பது கொஞ்சம் ஓவர் தான்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நெய்வேலியில் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நடந்த போது, தன்னுடைய ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவில் விஜய் ஒரு செல்பி போட்டோவை எடுத்தார். அதை பிப்ரவரி 10ம் தேதியன்று விஜய் என்ற பெயரில் ரசிகர்கள் நிர்வகிக்கும் டுவிட்டர் கணக்கில் பதிவிட்டார்கள்.
2020ம் ஆண்டில் ஒரு பிரபலத்தின் அதிகப்படியான ரிடுவீட் பெற்ற டுவீட் என்ற சாதனையை அந்த டுவீட் பெற்றது. 1 லட்சத்து 55 ஆயிரம் முறை அந்த டுவீட் சாதனை படைத்தது. தற்போது அது 1 லட்சத்து 64 ஆயிரம் ரிடுவீட்டாக உயர்ந்துள்ளது.
அந்த டுவீட்டின் ஒரு வருடக் கொண்டாட்டத்தைத்தான் விஜய் ரசிகர்கள் தற்போது #1YearOfMasterSelfie என்ற ஹேஷ்டேக்குடன் டுவிட்டரில் டிரெண்டிங்குடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.




