என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி | துல்கர் சல்மானுக்கு பறந்த திடீர் நோட்டீஸ்! | மகேஷ்பாபுவின் கிண்டலுக்கு பிரியங்கா சோப்ரா பதில் | புராண பின்னணியில் புதிய அனிமேஷன் பாகுபலி : டீசர் வெளியீடு | தென்னிந்திய சினிமா தான் 'பெஸ்ட்', ஹிந்தியில் 'ஸ்லோ': ஷ்ரத்தா தாஸ் | கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛மிடில் கிளாஸ்' : டீசர் வெளியீடு | இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கடந்த சில நாட்களாகவே திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் வெளியாக வேண்டிய படத்தை இத்தனை நாட்களாக தியேட்டர் வெளியீடு என காத்திருக்க வைத்துவிட்டு, தற்போது ஓடிடியில் வெளியிட வேண்டிய காரணம் என்ன என திரையுலகத்திலேயே கேள்வி எழுப்புகிறார்கள்.
படத்தை ஓடிடியில் வெளியிடுவதை தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் விரும்பவில்லை என்றே தெரிகிறது. தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில்தான் படத்தை உருவாக்கி இருக்கிறோம் என அவர்கள் தரப்பு வாதமாக உள்ளதாம்.
தனுஷ் ரசிகர்களின் எதிர்ப்பை அடுத்து படத்தை ஓடிடியில் வெளியிடும் தினத்தன்றே தியேட்டர்களிலும் வெளியிடலாமா என தயாரிப்பாளர் யோசிக்கிறாராம். ஆனால், அதற்கு தியேட்டர்காரர்கள் கண்டிப்பாக சம்மதம் சொல்ல மாட்டார்கள்.
ஏற்கெனவே, 'ஈஸ்வரன்' படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் தினத்தன்றே வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தினார்கள். அப்படியிருக்க இந்தியாவிலும் ஒரே நாளில் ஓடிடியில் வெளியிட கண்டப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
தியேட்டர்கள் சங்கத் தரப்பிலும் தயாரிப்பாளரிடம் ஓடிடி வெளியீடு வேண்டாம் என முறையிட்டுள்ளதாகத் தெரிகிறது. அடுத்த சில நாட்களில் படம் எப்படி வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.