7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

2020ம் ஆண்டு கொரோனா தொற்று தாக்கத்தால் திரைப்படத் தொழிலே நசிந்து போய்விட்டது. அதிலிருந்து எப்படியாவது மீள மாட்டோமா என்று ஏங்கித் தவித்தவர்கள் ஒன்பது மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. பொங்கல் வெளியீடாக வந்த மாஸ்டர் படம் தியேட்டர்களுக்கு மீண்டும் மக்களை வரவழைத்துவிட்டது. இந்நிலையில் நேற்று பிப்ரவரி 1 முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கிவிட்டது.
அதன் காரணமாக கடந்த வருடம் வெளியாக வேண்டிய பல படங்கள் மற்றும் இந்த வருட வெளியீட்டிற்காகத் தயாரான படங்கள் அடுத்தடுத்து வெளிவரக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இனி வரும் வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சில முக்கிய படங்களின் விவரம். இவற்றில் சில படங்களின் வெளியீடுகள் அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 5 : களத்தில் சந்திப்போம், ட்ரிப்
பிப்வரரி 12 : ஏலே, 100℅ காதல்
பிப்ரவரி 19 : சக்ரா, கமலி பிரம் நடுக்காவேரி
பிப்ரவரி 26 : டைட்டானிக், த சேஸ்
மார்ச் 26 : காடன்
ஏப்ரல் 2 : சுல்தான்
ஏப்ரல் 9 : கர்ணன்
ஏப்ரல் 14 : டாக்டர், துக்ளக் தர்பார்
மே 13 : மாநாடு
மேலே சொன்னவற்றைத் தவிர சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா, சர்வர் சுந்தரம், பாரிஸ் ஜெயராஜ், சமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளை யானை, சசிகுமார் நடித்துளள எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன், லாபம் உள்ளிட்ட படங்களையும் அடுத்த சில வாரங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
நேற்றுதான் தியேட்டர்களுக்கு 100 சதவீத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நான்கைந்து தயாரிப்பாளர் சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. இழுத்துக் கொண்டிருக்கும் முந்தைய பஞ்சாயத்துகள், வேறு பல பிரச்சினைகள் என ஒவ்வொரு படத்திற்கும் வெளியீட்டு சமயத்தில் ஏதோ ஒரு சிக்கல் வரும். அதனால், படங்களின் வெளியீட்டில் மாற்றங்கள் வரும்.
இத்தனை சங்கங்கள் வந்தாலும் சினிமாவில் பிரச்சினைகள் மட்டும் தீர்ந்தபாடில்லை. எப்போது அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்சினைகளை பேசி முடிக்கிறார்களோ அப்போதுதான் தமிழ் சினிமாவுக்கும் நல்ல காலம் பிறக்கும்.