புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
உலகம் முழுவதும் கொரோனா தொற்று 2019ம் ஆண்டு கடைசியில் மெல்ல பரவ ஆரம்பித்தது. 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த கொரானோ தாக்கம் போகப் போக அதிகரித்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் மாத மத்தியில் இந்தியா முழுவதும் உள்ள தியேட்டர்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பின் அக்டோபர் மாதத்தில் வட இந்தியாவில் உள்ள மாநிலங்களிலும, தமிழ் நாட்டில் நவம்பர் மாதத்திலும் எஞ்சிய மாநிலங்களில் டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கியது. தமிழ்நாட்டில் ஜனவரி 10 முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியது. ஆனால், அதற்கு மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் 50 சதவீதத்தைத் தொடர மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
தற்போது 100 சதவீத இருக்கைகளை நாளை முதல் ஆரம்பிக்கலாம் என பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகளில் அறிவித்துள்ளார்கள். சுமார் 11 மாத காலத்திற்கப் பிறகு தியேட்டர்கள் முழுமையாக செயல்பட உள்ளன. 'மாஸ்டர்' படம் 50 சதவீத இருக்கைகளிலேயே நல்ல வசூலைக் கொடுத்தது. ஆனால், மற்ற படங்களுக்கு எதிர்பார்த்த வசூல் இல்லை.
இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான தளர்வு பட்டியலில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் அடுத்த சில வாரங்களுக்கு வெளியாகவில்லை.
தற்போது அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியதால் பலரும் தற்போது தங்கள் வெளியீட்டுத் தேதிகளை விரைவில் முடிவு செய்ய வாய்ப்புள்ளது. அடுத்த வாரத்தில் பல படங்களின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம்.