சொர்க்கவாசலில் ஜெயில் கைதிகளின் வாழ்க்கை | 'எனை சுடும் பனி': மீண்டும் ஒரு பொள்ளாச்சி கதை | 'ப்ரீடம் அட் மிட்நைட்': இன்று வெளியானது | பிளாஷ்பேக்: லைவ் சவுண்டில் உருவான 'தூரத்து இடி முழக்கம்' | யஷ், நயன்தாரா படத்திற்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் | பிளாஷ்பேக்: அந்த காலத்து வாலிபர் சங்கம் | லக்கி பாஸ்கரை தொடர்ந்து மீனாட்சி சவுத்ரி நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்கள் ரிலீஸ்! | வெண்ணிலாவாக தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்: பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு | விடுதலை- 2 படத்தின் 'தினம் தினமும்' என்ற சிங்கிள் பாடல் நவம்பர் 17ல் வெளியாகிறது! | சீனாவில் வெளியாகும் விஜய் சேதுபதியின் மகாராஜா! |
சிவகார்த்திகேயன் நடித்த, மனம் கொத்தி பறவை படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் மலையாளத்தை சேர்ந்த ஆத்மியா. இவரது அமைதியான முகம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து, போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்தார். மலையாளத்தில் ஜோசப் உட்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார். தற்போது சமுத்திர கனியுடன் வெள்ளை யானை படத்தில் நடித்துள்ளார் . கொரோனா காலத்தில் கால்சென்டரில் பணி புரிந்து மக்களுக்கு சேவை செய்தார்.
இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த கப்பலில் பணிபுரியும் சனூப் என்பவரை திருமணம் செய்கிறார். இவர்களது திருமணம் ஜன., 25ல் கன்னூரில் காலை 9.59 மணி முதல் 11.33 மணிக்குள் நடைபெற இருக்கிறது. இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். ஜன., 26ல் ஸ்டார் ஓட்டலில் திருமண வரவேற்பு மாலை நடக்கிறது. திருமணத்திற்கு பிறகும் ஆத்மியா நடிக்க சனூப் சம்மதம் சொல்லியிருக்கிறார். மலையாளத்தில் தற்போது இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் ஆத்மியா.