நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பா.ரஞ்சித்தின் உதவியாளர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கும் படம் 'சொர்க்கவாசல்'. இதில் ஆர்ஜே.பாலாஜி, இயக்குநர் செல்வராகவன், பாலாஜி சக்திவேல், நட்டி, கருணாஸ், ஷோபா சக்தி, மியூசிக் டைரக்டர் அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா, மலையாளத்தின் பிரபலமான ஷரத் உதீன், ஹக்கீம் ஷா உள்பட பலர் நடிக்கிறார்கள். மலையாள நடிகை சானியா ஐயப்பன் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மம்மூட்டியின் 'பிரமயுகம்' படத்திற்கு இசையமைத்த கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சித்தார்த் கூறியிருப்பதாவது: இது ஜெயில் வாழ்க்கை பற்றிய கதைதான். ஜெயில் என்பது சமுதாயத்திற்கு விரோதமானது என்ற ஒரு நிலைப்பாட்டை நாம் உருவாக்கி வைத்துள்ளோம். ஜெயில் சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. பல குற்றம் செய்தவர்கள், குற்றமே செய்யாத நிரபராதிகள் ஒன்றாக ஒரே கட்டுப்பாட்டுக்குள் வாழ்கிற இடம். அப்படி வாழ்ந்தவர்களை, வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் நடிக்க வைத்து, அவர்கள் கதையையும் இணைத்து படத்தை உருவாக்கி உள்ளேன்.
ஜெயில் வாழ்க்கை பற்றி 'வடசென்னை', 'விருமாண்டி' படங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த படங்கள் சொல்லாத சில விஷயங்களை இந்த படம் சொல்கிறது. சிறையில் பணியாற்றும், காவலர்களும் சிறை வாழ்க்கைதான் வாழ்கிறார்கள், அவர்களும் அங்கிருந்து வெளியில் வர நினைக்கிறார்கள் என்பதையும் பேசுகிற படம்.
இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி நடிக்கலாம் என்று கருத்து சொன்னது தயாரிப்பாளர்கள்தான். அவர் குடும்ப பாங்கான படங்களில் நடிப்பவர் இதற்கு அவர் செட் ஆவாரா என்ற தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் கதையை கேட்டதும் அந்த கேரக்டராகவே மாறி நின்றார். நிச்சயம் இதில் வேற மாதிரியான பாலாஜியை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.