நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல மலையாள இயக்குனரும், நடிகையுமான கீது மோகன்தாஸ் தற்போது இயக்கி வரும் படம் 'டாக்சிக்'. 'கேஜிஎப்' புகழ் யஷ் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம். இந்தப் படத்தில் நயன்தாரா, தாரா சுத்திரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கே.வி.என் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் பெங்களூரை சுற்றியுள்ள மலைப்பகுதியில் நடந்து வருகிறது. குறிப்பாக பீன்யா, ஜலஹள்ளி பகுதியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான மரங்களை 'டாக்சிக்' படக்குழுவினர் வெட்டியுள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக மாநில அரசுக்கு புகார்கள் குவிந்ததை தொடர்ந்து கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மரங்களை வெட்ட அனுமதியளித்தவர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.