கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி நடராஜன், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்த படம் மகாராஜா. கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதோடு ஓடிடியிலும் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் வருகிற நவம்பர் 29ம் தேதி மகாராஜா படம் சீனாவில் வெளியாக இருப்பதாக இயக்குனர் நித்திலன் சாமிநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் சீன மொழியில் உருவாகி உள்ள ஒரு போஸ்டர் உடன் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் நடிகர் அமீர்கான் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.