பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
என்.சந்திரா இயக்கத்தில், லட்சுமிகாந்த் பியாரேலால் இசையமைப்பில் அனில் கபூர், மாதுரி தீட்சித், அனுபம் கெர், சங்கி பாண்டே, மந்தாகினி மற்றும் பலர் நடிப்பில் 1988ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி வெளிவந்த படம் 'தேசாப்'. 80களில் வெளிவந்த ஹிந்தி படங்களில் மிகப் பெரும் வெற்றி பெற்ற ஒரு படமாக அமைந்தது.
பக்கா மாஸ் கமர்ஷியல் படமாக வந்த படம் வட இந்தியாவைத் தவிர, தென்னிந்திய மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. மாதுரி தீட்சித் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அவருடைய நடனத்தில் அமைந்த 'ஏக் தோ தீன்' பாடல்தான் இந்தப் படத்தை பெரும் அளவில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கக் காரணமாக அமைந்தது.
படத்தின் 36வது ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து படத்தின் நாயகி மாதுரி தீட்சித், அப்படத்தின் புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்து, “இன்று 'தேசாப்' படத்தின் 36வது ஆண்டு தினம். இந்தப் படம் என் இதயத்தில் ஒரு சிறப்பைப் பிடித்த ஒன்று. உங்களது தொடர்ச்சியான பாராட்டுக்கள் எனக்கு நிறைய புரிய வைக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகும் 'ஏக் தோ தீன்' பாடலும் மோகினியின் கதையும் பார்வையாளர்களால் விரும்பப்படுவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் அசைக்க முடியாத அன்பிற்கும், ஆதரவிற்கும் நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிளாசிக் சினிமாவை இன்னும் பல ஆண்டுகள் ஒன்றாக இணைந்து கொண்டாடுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.