விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
அஜித்தின் உதவும் குணம் பற்றி எல்லோருக்குமே தெரியும். அவர் செய்யும் உதவிகள் வெளி உலகத்துக்கு வருவதில்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை. இந்த நிலையில் அவர் வாரணாசியில் சந்தித்த ஒரு இட்லி கடை சிறுவனின் படிப்பு செலவை ஏற்றிருக்கும் தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது.
ஐதராபாத்தில் வலிமை படப்பிடிப்பில் இருந்த அஜித், படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அங்கிருந்து சிக்கிமிற்கு பைக் பயணம் மேற்கொண்ட செய்தி பரவலாக வெளியானது. இந்த பயணத்துக்கு இடையில் நடந்த ஒரு சம்பவம் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. இந்த பைக் பயணத்தில் அவர் வாரணாசிக்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு தமிழர் நடத்தும் இட்லி கடையை தேடிப்பிடித்து சாப்பிடச் சென்றுள்ளார்.
அப்போது அந்த கடையில் ஒரு சிறுவன் வேலை செய்திருக்கிறான். அந்த சிறுவன் அஜித்தை அடையாளம் கண்டு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறான். இதனால் அவனுடன் அஜித் பேசி இருக்கிறார். அப்போது அந்த சிறுவன் இது என் அப்பா நடத்தும் கடை தான். கொரோனா காலத்தில் 6 மாதம் கடை பூட்டி இருந்ததால் மிகவும் வறுமை நிலைக்கு வந்து விட்டோம். பீஸ் கட்ட முடியாமல் எனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டேன். என்று கூறியிருக்கிறான்.
இதைக் கேட்ட அஜித் அவன் படிப்பு செலவை தான் ஏற்பதாக இட்லி கடைக்காரரிடம் கூறிவிட்டு சென்றதோடு. அந்த பகுதி லொக்கேஷன் மானேஜரை தொடர்பு கொண்டு அந்த சிறுவன் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு கூறி விட்டுச் சென்றிருக்கிறார்.