சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டம் | எந்த ஒரு கட்டுக்கதையும் என்னை அழித்துவிட முடியாது ; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து அஜ்மல் | 3வது முறையாக பிரித்விராஜூடன் பார்வதி இணைந்து நடிக்கும் 'ஐ நோபடி' படப்பிடிப்பு நிறைவு | இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை |
நடிகர் விஜய் சேதுபதி ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். தமிழ் தொடங்கி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அவரது சினிமா எல்லை விரிந்து கொண்டே செல்கிறது. படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாட்களில் தனது திரையுலக நண்பர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பார். அந்த வகையில் நேற்று மதியம் நடிகை குஷ்புவின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்த செய்தியை புகைப்படத்துடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள குஷ்பு, ''விஜய் சேதுபதி மதிய உணவு சாப்பிட எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். நிறைய பேச்சுக்களுடன் கூடிய எளிய வீட்டு உணவு. ஒரு சாதாரண நாளை மிகச்சிறந்த நாளாக மாற்றியதற்கு நன்றி விஜய்'' என்று பதிவிட்டுள்ளார்.