மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ரம்யா உள்ளிட்ட பலர் நடித்து, ஜன., 13ல் திரைக்கு வந்துள்ள படம் மாஸ்டர். இரண்டு விதமாக இருந்தாலும் வசூலை வாரிக் குவிக்கிறது மாஸ்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி முதன்முறையாக விஜய்யின் படம் ஹிந்தியிலும் டப்பாகி ரிலீஸாகி உள்ளது.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் பெரும் தொகை கொடுத்து பெற்றுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபிஷேக் ரெகோ கூறியிருப்பதாவது: மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியதில் எங்களுக்குப் பெருமை. தமிழில் இந்தப் படம் உருவாக்கிய மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களை ஈர்க்குமாறு நாங்கள் மீண்டும் உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர் நோக்கியிருக்கிறோம் என்றார்.
தியேட்டரில் படம் பார்த்த விஜய்
இதனிடையே மாஸ்டர் படத்தை சென்னை தேவி தியேட்டரில் படம் வெளியான அன்றே முதல் காட்சியை விஜய் பார்த்துள்ளார். இதுதொடர்பான சிசிடி காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் அடையாளம் கண்டுகொள்ளாதபடி தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்து கொண்டு, புரொஜெக்டர் ரூம் அருகில் உள்ள பால்கனியில் இருந்து மாஸ்டர் படத்தையும், ரசிகர்களின் ஆரவாரத்தையும் கண்டு விஜய் ரசித்துள்ளார். விஜய் தியேட்டருக்குள் நுழைவதும், தியேட்டர் மானேஜர் வரவேற்புதுமான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.