நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
தென்னிந்தியத் திரையுலகில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு திரையுலகமாக கன்னடத் திரையுலகம் இருந்து வந்தது. அவ்வப்போது சில நல்ல படங்கள் கன்னடத்தில் வெளிவந்தாலும் அவை அந்த மாநிலத்தைத் தவிர வேற்று மாநிலங்களில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதில்லை.
அந்த நிலையை 2018ம் ஆண்டு வெளிவந்த 'கேஜிஎப்' படம் முற்றிலும் மாற்றியது. தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான அப்படம் ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அதனால், இரண்டாம் பாகத்தில் பாலிவுட் நடிகர்களான சஞ்சய் தத், ரவீனா டான்டன் ஆகியோரை முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தனர்.
நேற்று, 'கேஜிஎப் சேப்டர் 2' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல புதிய சாதனைகளை அந்த டீசர் படைத்து வருகிறது. 5 கோடி பார்வைகளையும், 3 மில்லியன் லைக்குகளையும் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரு கன்னடப் படத்திற்கு இந்த அளவிற்கு இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பது குறித்து கன்னடத் திரையுலகினர் பலரும் அவர்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அது மட்டுமல்ல மற்ற திரையுலகினரும் டீசரைப் பாராட்டி வருகிறார்கள்.