4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

கடந்த 2006ம் ஆண்டில் ஷாரூக்கான், பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்த படம் ' டான்'. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து டான் இரண்டாம் பாகத்திலும் ஷாரூக்கான் நடித்து கடந்த 2011ம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்த இரண்டு பாகங்களையும் பர்ஹான் அக்தர் தயாரித்து, இயக்கினார்.
ஏற்கனவே பர்ஹான் அக்தர் டான் 3ம் பாகத்தில் ஷாருக்கானுக்கு பதிலாக நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக வைத்து இயக்குவதாக அறிவித்தார். இப்படத்திற்கு நம்ம ஊர் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கூடுதல் திரைக்கதை எழுதுகின்றனர். இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடிக்கிறார்.
இதைத்தொடர்ந்து இந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நம்ம ஊர் நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். வளர்ந்து வரும் இளம் நடிகரான அர்ஜுன் தாஸ் தற்போது ஓ.ஜி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். இதையடுத்து பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக தயாராகி வருகிறார்.