இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
ரவி அரசு இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இயக்கத்தில், விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் விஷாலின் 35வது படத்திற்கு 'மகுடம்' என்ற பெயரை அறிவித்திருக்கிறார்கள். அதற்கான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். அதன் மூலம் கடல் சார்ந்த ஒரு ஆக்ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது. விஷால் நடித்து இந்த வருடம் வெளிவந்த 'மத கஜ ராஜா' படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. பல வருடக் காத்திருப்பிற்குப் பிறகு அப்படம் வந்தது.
அதற்கடுத்து நின்று போயிருந்த 'துப்பறிவாளன் 2' படத்தில் தான் அவர் மீண்டும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை ஆரம்பிக்காமல் 'மகுடம்' படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
'மகுடம்' என்ற பெயரில் ஏற்கெனவே 1992ம் ஆண்டு ஒரு படம் வெளிவந்துள்ளது. பிரதாப் போத்தன் இயக்கத்தில், சத்யராஜ், பானுப்ரியா, கவுதமி மற்றும் பலர் அப்படத்தில் நடித்திருந்தனர். அப்பெயரை 33 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.