மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
குலதெய்வம் ராஜகோபால் என்ற நடிகர் ஓரளவிற்கு அனைவருக்கும் தெரிந்தவர்தான். 100 படங்களுக்கு மேல் நடித்த அவர் தனது கடைசி காலத்தில் வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தித்தான் தனது குடும்பதை காப்பாற்றினார்.
நாடகத்தில் நடித்து வந்த ராஜகோபால் 1956ம் ஆண்டு வெளிவந்த குலதெய்வம் படத்தில் நான்கு நாயகர்களில் ஒருவராக நடித்தார். அன்று முதல் 'குலதெய்வம்' ராஜகோபால் என்று அழைக்கப்பட்டார். கதையின் நாயகன், இரண்டாவது நாயகன், வில்லன், குணசித்தர வேடங்களில் 100 படங்களுக்கு மேல் நடித்தார்.
ஒரு கட்டத்தில் படம் தயாரிக்க விரும்பிய ராஜகோபால் அதுவரை தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் போட்டு டி. ஆர். மகாலிங்கத்தை கதாநாயகனாக நடிக்க வைத்து, "பண்ணையார் மகன்", "கனவு பலித்ததம்மா" ஆகிய படங்களை, தயாரித்தார். இதில் கடனாளி ஆகி, படங்களும் முழுவதும் முடிந்தும், திரையிட முடியாமல், பெரும் இழப்பை சந்தித்தார். பல ஆண்டுகள் நடிப்புத் துறையில் இருந்து விலகி இருந்தார்.
பின்பு, வில்லுப்பாட்டுக் கலையை, கையிலெடுத்து, மீனாட்சி கல்யாணம், ஐயப்பன் சரிதம், திருமுருகன் ஆறுபடை சரிதம், மகாகணபதி சரிதம், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு, கலைவாணர் வரலாறு, காத்தவராயன் கதை, முனீஸ்வரன் கதை, ஐயனார் கதை, அகோர வீரபத்திரர் கதை, கருப்பர் கதை, காலபைரவர் கதை உள்பட பல வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி, தனது குடும்பத்தைக் காப்பாற்றினார்.
பின்னர் புயல் கடந்த பூமி, படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து, வீடு மனைவி மக்கள், வாய்ச்சொல்லில் வீரனடி, பெண்மணி அவள் கண்மணி , எங்க வீட்டு வேலன், எங்க சின்ன ராசா, பவுனு பவுனுதான், ஆராரோ ஆரிரரோ தாவணிக் கனவுகள், ஆகிய படங்களில் நடித்தார்.