ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி | பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் |
காஷ்மீரின், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இதில் ஆந்திராவை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார். இவரின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க உள்ளனர்.
தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் அவரின் வேடத்தில் தெலுங்கு பிக்பாஸில் பங்கேற்று பிரபலமான கவுதம் கிருஷ்ணா நடிக்கிறார். விஷான் பிலிம் பேக்ட்ரி சார்பில் சுரேஷ் பாபு தயாரிக்கிறார். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட எண்ணி உள்ளனர். இயக்குனர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. முரளி நாயக்கின் குடும்பத்தாரிடம் முறையாக அனுமதி பெற்று இந்த படத்தை எடுக்கின்றனர்.
ஹீரோ கவுதம் கிருஷ்ணா கூறுகையில், ‛‛இது படம் அல்ல, நிஜ ஹீரோவின் கதை. இதுவரை தெலுங்கு சினிமாவில் தனி ராணுவ வீரர் தொடர்பான படம் வெளியாகவில்லை. இதுதான் முதல்முறை. முரளி நாயக்கின் கதை இந்த உலகத்திற்கு சொல்லப்பட வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் இதில் முக்கிய இடம் பெறுகிறது. அந்த போரில் பங்கேற்று உயிர்நீத்த அவரை பற்றி இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படியொரு வலுவான கதையில் நான் நடிப்பதை அதிர்ஷ்டமாக உணருகிறேன்'' என்றார்.