ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி | பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் |
தமிழ்த் திரையுலகத்தின் முதல் 100 கோடி படமாக 2007ம் ஆண்டு வெளிவந்த 'சிவாஜி' படம் முதல் சாதனையைப் படைத்தது. அந்தப் படத்தை ஷங்கர் இயக்க ரஜினிகாந்த், ஷ்ரேயா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். அதற்குப் பிறகு ஷங்கர் இயக்கிய 'எந்திரன், நண்பன், ஐ, 2.0, இந்தியன் 2' ஆகிய படங்களும் 100 கோடி வசூலைக் கடந்தது. இந்த படங்கள் மூலம் மட்டும் மொத்தமாக 1700 கோடியை தன் இயக்கத்தின் மூலம் வசூலித்துத் தந்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.
அந்த சாதனையை தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முறியடித்துள்ளார். அவரது இயக்கத்தில் வெளிவந்த 'மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி' ஆகிய படங்கள் மூலம் அவர் வசூலித்துத் தந்துள்ள தொகை 1900 கோடி. 'கூலி' படத்தின் வசூல் இன்னும் போகும் என்பதால் 2000 கோடி வசூலை அவர் கடப்பார் என்று உறுதியாகச் சொல்லலாம். குறுகிய காலத்தில் குறைந்த படங்களில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
அடுத்து அவர் இயக்க உள்ள படங்கள் மூலம் ஒரே படத்தில் 1000 கோடி வசூலைக் கடப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இப்போது வந்துள்ள தகவல்படி ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தின் மூலமாகவோ, அல்லது ஹிந்தியில் அமீர்கான் நடிக்க உள்ள படத்தை அவர் இயக்குவதான் மூலமாகவே இந்த சாதனை நடக்க வாய்ப்புகள் அதிகம்.