டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாள திரையுலகில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நாளை (ஆக.,14) தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் தலைவர் பதவிக்கு முதன்முறையாக ஒரு பெண் வேட்பாளராக நடிகை சான்ட்ரா தாமஸ் என்பவர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர் இரண்டு படங்கள்தான் தயாரித்திருக்கிறார் என்றும் மொத்தம் மூன்று படங்கள் தயாரித்திருக்க வேண்டும் என்றும் காரணம் காட்டி அவரது வேட்பு மனுவை தயாரிப்பாளர் சங்க தேர்தல் குழு நிர்வாகிகள் நிராகரித்தனர்.
அதே சமயம் சான்ட்ரா தாமஸ், நான் தனியாக இரண்டு படங்களையும் விஜய் பாபு என்கிற நடிகருடன் இணைந்து ப்ரைடே பிலிம் ஹவுஸ் என்கிற நிறுவனம் மூலமாக ஏழு படங்களையும் தயாரித்திருக்கிறேன் என்றும் வேண்டுமென்றே அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தனது மனுவை நிராகரித்துள்ளதாக குற்றம் சாட்டிய சான்ட்ரா தாமஸ் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் துணை நீதிமன்றம் சான்ட்ரா தாமஸின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இது குறித்த முழு தீர்ப்பின் விவரம் வெளியாகா விட்டாலும் தலைவர் பதவிக்கு போட்டியிட மூன்று படங்களை தயாரித்து இருக்க வேண்டிய நிலையில் சான்ட்ரா தாமஸ் தான் தனியாக இரண்டு படங்களை மட்டுமே தயாரித்திருப்பதால் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
தனது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருப்பது எதிர்பாராதது மற்றும் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள சான்ட்ரா தாமஸ் இது குறித்து தனது வழக்கறிஞர் குழுவுடன் விவாதித்து அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். ஆனாலும் நாளை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அவர் இந்த தேர்தலில் போட்டியிட முடியாத சூழலே உருவாகி இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.




