டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ரஜினிகாந்த் நடித்த ‛கூலி' படம் நாளை (ஆக.,14) வெளியாக உள்ள நிலையில், இப்போதே அவரின் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுள்ளனர். கூலி படத்தின் முதற்காட்சி எந்த நாட்டில் முதலில் திரையிடப்படுகிறது என்று விசாரித்தால், தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த படம் 700 முதல் 800 தியேட்டர்களி்ல் திரையிடப்படுகிறது. 5 காட்சிக்கு அரசு அனுமதி அளித்தாலும், தமிழகத்தில் முதற்காட்சி 9 மணிக்குதான் தொடங்குகிறது.
பக்கத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகாவில் காலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. அதனால், பலர் ஆந்திரா, கர்நாடகாவுக்கு சென்று படம் பார்க்க உள்ளனர். கேரளாவில் 6 மணிக்கு முன்னதாகவே தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால், உலகளவில் முதல்காட்சி அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் தொடங்குகின்றன. இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகின்றன என்கிறார்கள். அதனால் காலை 8 முதல் படத்தின் கூலி ரிசல்ட் நிலவரம் சோஷியல் மீடியாவில் தெரியவரும்.
இந்தியா முழுக்க கூலிக்காக 11 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டுமே 10 லட்சம் வரை புக் ஆகி உள்ளதாம். தமிழகத்தில் மட்டும் கூலி படத்தின் முதல் நாள் வசூல் 30 கோடி முதல் 40 கோடிவரை இருக்கும் கணக்குகள் சொல்லப்படுகின்றன. உலகளவில் கூலி வசூல் 150 கோடி தொடும் என்றும் கோலிவுட்டில் வட்டாரத்தில் பேசப்படுகிறது.




