சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
1993ம் ஆண்டில் செல்வா இயக்கிய ‛அமராவதி' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் அஜித்குமார். அதன்பிறகு ‛பவித்ரா, ஆசை, வான்மதி, காதல் கோட்டை' என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். இந்த நிலையில், 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதியோடு அஜித்குமார் தனது திரைப்பயணத்தில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
அதையடுத்து அவரது ரசிகர்கள் ‛33 இயர்ஸ் ஆப் அஜித்குமார்' என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங் செய்துள்ளார்கள். அதேபோல் அஜித்குமாரின் ‛குட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், ‛‛33 ஆண்டு அற்புதமான பயணம். உங்களது ஈடு இணையில்லாத கடினமான உழைப்பு ஒரு ரத்தினம். உங்களை எப்போதும் நேசிக்கிறேன் சார். 33 இயர்ஸ் அஜித்திஸம்'' என்று பதிவிட்டு அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படதையும் பதிவிட்டுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.