தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
விஜயகாந்த்தின் 100வது படமான ‛கேப்டன் பிரபாகரன்', விஜயகாந்த்தின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆகஸ்ட் 22 அன்று ரீ-ரிலீஸ் ஆகிறது. சென்னை கோயம்பேடு விஜயகாந்த் நினைவிடத்தில் இந்த பட தேதி வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.
படம் குறித்து ஆர்.கே.செல்வமணி பேசுகையில், ‛‛டிஜிட்டலில் இந்த படம் பிரமாண்டமாக வெளியாகிறது.1991 ஏப்ரல் 14ல் இந்த படம் வெளியானது. அந்த சமயத்தில் பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து பல காடுகளில் எடுத்தோம். விஜயகாந்தால் எந்த பிரச்னையும் வரவில்லை. பல விபத்துகளை சந்தித்தோம். அவர் ஒரு விபத்தில் புதர் மீது விழுந்தார், முதுகில் வலி வந்தது. சாலக்குடி அருவியில் 300 அடி வழுக்கு பாறையில் விஜயகாந்த் தைரியமாக நடித்தார். ஒரு கட்டத்தில் தண்ணீர் அதிகமாக கிரேன் கூட அடித்து சென்றது. ரயில், குதிரை, காடு சம்பந்தப்பட்ட காட்சிகளில் இப்போதுதான் விஜயகாந்த்துடன் பேசிய மாதிரி இருக்கிறது. 30 ஆண்டுகளுக்குபின் இந்த படம் வெளியாகிறது. ஆனாலும், 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. அனைத்து ஏரியாக்களும் விற்பனை ஆகிவிட்டது'' என்றார்.
அதில் பிரேமலதா கலந்து கொண்டு பேசுகையில் ''அந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி எடுத்துக் கொண்டிருந்தபோதுதான் எங்களுக்கு முதல் மகனாக பிரபாகரன் பிறந்தான். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அப்போது நடந்த விஷயங்கள் என் மனதில் இன்றும் நினைவில் இருக்கிறது. சில படங்களை சென்டிமென்ட்டாக எங்கள் வீட்டில் படமாக்குவார் விஜயகாந்த். சாலிகிராமத்தில் உள்ள எங்கள் வீடு சின்னது. ஆனாலும், அதை திறமையாக படமாக்கினார் ஆர்.கே.செல்வமணி. அந்த சின்ன இடத்தில் விஜயகாந்த், ரம்யாகிருஷ்ணன் காட்சிகள் படமாக்கப்பட்டது'' என்றார்.